விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துக்களில் பள்ளி
மாணவி உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அருப்புக்கோட்டை அருகே
கல்லூரணியில் சிவக்குமார் என்ற காவலர், தமது நண்பர்கள் இருவருடன் இரு சக்கர
வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது தனியார் நூற்பாலை பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது
மோதியதில் சிவக்குமார் உள்ளிட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே
பலியாகினர்.
இதேபோன்று, விருதுநகர் அருகே வத்திராயிருப்பில் ஒன்றாம் வகுப்பு மாணவி
வர்ஷினி, பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது
ஆட்டோவில் இருந்து வர்ஷினி வெளியே எட்டிப்பார்த்துபோது, எதிரே வந்த வேன்
மாணவி மீது மோதியது, இதில் சம்பவ இடத்திலேயே வர்ஷினி உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கள் தொடர்பாக இரண்டு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.