விருதுநகர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு பத்து ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முத்து கணேசன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவர் மீது, கடத்தல், பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.
விருதுநகர் அருகே உள்ள மீசலூர் அழகாபுரியைச் சேர்தவர் முத்து கணேசன். இவரது நண்பரின் மகளுக்கும் இவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவி, விடுமுறையில் விருதுநகர் சென்றபோது, பின்தொடர்ந்த முத்து கணேசன். ஆசை வார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், மாணவி தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்டதற்கு அவர் மறுக்கவே, மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.