ராஜபாளையம் அருகே குடிநீர் மற்றும் மின்சாரம் கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ராஜபாளையத்தை அடுத்த சத்திரப்பட்டியில் அதிமுக அரசின் ஓராண்டு சாதனை 
விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற தமிழக செய்தி மற்றும் 
திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக அரசின் சாதனைகளைப் 
பட்டியலிட்டார். 
அப்போது, மின்தட்டுப்பாடு, குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து 
அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால், கூட்டத்தை பாதியிலேயே 
முடித்துக் கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அங்கிருந்து வெளியேறினார்.                                                                 தேனி.K.ராஜா
