பட்டாசு ஆலை விபத்து 45 நாட்களுக்குள் மத்திய குழு அறிக்கை தாக்கல்

    நாற்பது பேரை பலிகொண்ட சிவகாசி முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பான விசாரணை நீடிக்கிறது.
ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட விசாரணையை வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை இணை இயக்குனர் சைதன்ய பிரசாத் தலைமையிலான 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் மேற்கொண்டனர்.
வெடிவிபத்து சமயத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள் என 20பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இந்த விசாரணையின் அறிக்கையை இன்னும் 45நாட்களுக்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய குழுவினர் தெரிவித்தனர்.