சிவகாசி அருகே – ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

     விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாரப்பட்டியில் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட பட்டாசு குடோனுக்கு வருவாய்த் துறையினர் சீ‌ல் வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தையடுத்து, மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலைகளில் வருவாய்த் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சிவகாசி தாசில்தார் சாந்தா தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டிருந்த போது, உரிமம் இல்லாமல் செயல்பட்ட இந்த குடோனை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனைதொடர்ந்து குடோனில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு பண்டல்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பட்டாசு குடோன் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.