பட்டாசு ஆலைகளுக்கு சீல் – விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை


   விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விதிமுறை மீறி செயல்பட்ட 3 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த 3 ஆலைகளிலும், விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது அதிகாரிகளின் ஆய்வின் போது தெரிய வந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சிவகாசியை அடுத்த முதலிபட்டியில் ஓம்சக்தி பட்டாசு ஆலையில் கடந்த வாரம் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில், 38 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனைதொடர்ந்து அனுப்பங்குளத்தில் உள்ள சிவராஜ் பட்டாசு ஆலை, சிவகாசியில் உள்ள ஓவியா மற்றும் பனையடிபட்டியில் உள்ள பரணி பட்டாசு ஆலைகள் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் 4-வது நாளாக இன்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
-வெங்கடேஷ்