குடியிருப்புப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலை

பட்டாசு ஆலையை மூடக்கோரி மனு : சிவகாசி அருகே விளாம்பட்டியில் குடியிருப்புப் பகுதியில்  உள்ள பட்டாசு ஆலையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். அங்குள்ள காமராஜர் காலனியில் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்படுகிறது. ஆலை தொடங்குவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அரசு அதிகாரிகள் ஆலைக்கு அனுமதி வழங்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள, 712 பட்டாசு ஆலைகளில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.