விருதுநகரில் வெடிவிபத்து: 5 பெண்கள் காயம்


Pasumai Nayagan
       விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டியில் தனியார் தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 5 பெண்கள் காயமடைந்தனர். முதலிப்பட்டியில் தேசிங்கு ராஜா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பட்டாசுகளை தொழிலாளர்கள் பேக்கிங் செய்து கொண்டிருந்த போது திடீரென்று உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் வீரம்மாள், அழகுமணி உட்பட ஐந்து பெண்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலை உரிமையாளர்கள் தண்ணீர் ஊற்றி தடயத்தை அழித்துள்ளதாகவும், காவல்துறைக்குத் தகவல் கொடுக்காமல் காயமடைந்தவர்களை அவர்களுடைய சொந்த வேனில் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.