ஜப்பான் மியாகோ மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம்


     ஜப்பான் மியாகோ மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
     ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து, 525 கிலோ மீட்டர் தென் கிழக்கே அமைந்துள்ள மியாகோ மாகாணத்தை மையமாக கொண்டு, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
   இன்று அதிகாலை 5 மணி அளவில், கடலுக்கு அடியில், இந்த நிலநடுக்க மையம் கொண்டிருந்தாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
   நிலநடுக்கப் பாதிப்புகள் மற்றும் உயிர் சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்க தகவல்களை உடனடியாக வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், தகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஜப்பான் அரசை அறிவுறுத்தியுள்ளது.
 
 கடந்த 2011-ஆம் ஆண்டு புகுஷிமா பகுதியில் ஏற்பட்ட பயங்கரம் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.