ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது


   ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவன், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதனால், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்று, அந்த நிறுவனத்தை மூட உத்தரவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    இதே போன்று, மனுதாரர் தரப்பில் ஆஜரான ம.தி.மு.க.  பொதுச்செயலாளர் வைகோ, பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துரைத்தார்.

    இதனை தொடர்ந்து, கடந்த 30ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஸ்டெரிலைட் ஆலையை தமிழக அரசு மூடிவிட்டதாகவும் வைகோ தெரிவித்தார், இதனை கேட்ட நீதிபதிகள், சுற்றுச்சூழலை கண்காணிப்பதற்கும், இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதற்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உரிமை உண்டு என்றனர்.